இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்,
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும், இந்திய விடுதலைப் போராட்டமும், டாக்டர் ச. சங்கர சரவணன், விகடன் பிரசுரம், விலை 195ரூ.‘
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., TNPSC முதலான பரீட்சைகள் எழுதுபவர்களுக்கு உதவும்வகையில் எழுதப்பட்டுள்ள நூல் இது. இந்தியாவை வெள்ளையர்கள் ஏறத்தாழ 200 ஆண்டுகள் ஆண்ட காலகட்டத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அவற்றை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. நன்றி: தினத்தந்தி.
—-
இறைவழி மருத்துவம், ஹெல்த்டைம் பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-310-5.html நோய்களும், வறுமையும் ஏன் ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்றன? அவற்றை ஏன் மனிதனால் நீக்கிக்கொள்ள முடியவில்லை? நோயையும், வறுமையையும் இறையருளைக்கொண்டு நீக்கி, எவ்விதம் முழுமையாக சுகமாக வாழமுடியும் என்பதற்கான வழிகாட்டி நூல். இந்நூலை கற்றறியும்போது ஒவ்வொருவரும் தத்தம் மன அழுத்தம், மனபாரம், கவலை, பயம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டவர்களாகவும், நிம்மதியும், அமைதியும், சந்தோஷமும் தம்மை நெருங்கி வருவதையும் சந்தேகத்திற்கு இடமின்றி உணர்வார்கள். அவ்விதமான உணர்வுகள் மனதை நிரப்பும்பொழுது அவர்களின் இருதயம் லேசாவதையும், தங்களை விட்டு நோய்கள் நீங்குவதையும் உறுதியாக அறிவார்கள் என்கிறார் மருத்துவர் பஸ்லூர் ரஹ்மான். நன்றி: தினத்தந்தி, 5/11/2014.