மெய்நிகரி
மெய்நிகரி, கபிலன் வைரமுத்து, கிழக்கு பதிப்பகம், பக். 152, விலை 125ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/meinigari.html மெய்க்கு நிகரான, ஆனால் மெய் அல்லாத சூழலைக் குறிப்பது மெய்நிகர். ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஐந்துபேரின் வாழ்வனுபவங்களைச் சுற்றியே இப்புதினம் பின்னப்பட்டுள்ளது. அந்த தொலைக்காட்சி நிறுவனமே மெய்நிகரி. முதல் அத்தியாத்திலேயே இது மற்றொரு தமிழ்ப் புதினம் அல்ல என்பது உறுதியாகிறது. ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியில் சேரும் மூன்று இளைஞர்களும், இரு இளம் பெண்களும் நட்புக் கொள்வது சாதனை செய்யத் துடிப்பது, பணியில் ஏற்படும் இடையூறுகள், அலுவலக அரசியல், அவர்களுக்குள்ளே ஏற்படும் காதல், மோதல் போன்ற இன்றைய இளயை தலைமுறை வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது இப்புதினம். பிளாஷ் பேக் என்று சொல்லப்படுகிற ‘நடந்ததை நினைத்துப் பார்க்கும்’ பழைய முறையிலேயே கதை நகர்ந்தாலும் விடியோவில் காட்சிகளைப் பார்ப்பது, நாயகன் அந்தக் காட்சிகளின் மீது தன் குரலைப் பதிவு செய்வது போன்ற உத்திகளால் அந்தப் பழைய முறையே நவீனமாகிவிடுகிறது. அதனால், உரையாடலை விட விவரிப்பு அதிகமாகிவிடுகிறது. ஆயினும் சொற்சிக்கனத்தோடு மொழியைக் கையாண்டிருப்பதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். ஆயினும், புதினத்தின் சில பகுதிகளில் குறிப்பிடத்தக்க முக்கிய நிகழ்வுகள் எதுவுமில்லாமலேயே போவதும், இறுகிப் பகுதியில் நம்ப முடியாத வகையில் நாடகத்தன்மை அமைந்து விட்டதையும் (டெரன்ஸ் பால் பெனாசிர் காதல் முடிவதிலிருந்து இறுதிவரை) தவிர்த்திருக்கலாம். தொலைக்காட்டசி ஊடகத்துறையையும் இன்றைய இளைஞர்களின் வாழ்வியலையும் சிறப்பாகவும் சுவையாகவும் பதிவு செய்திருக்கும் இப்புதினம் நவீனத் தமிழுக்குப் புதுவரவு. நன்றி: தினமணி, 29/12/2014.