சமூகம் வலைத்தளம் பெண்
சமூகம் வலைத்தளம் பெண், தி. பரமேசுவரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 220, விலை 180ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-305-5.html பெண்ணுரிமை, சமூகம், அரசியல், கலை, இலக்கியம் என அனைத்துத் தளங்களிலும் வாள்களைச் சுழற்றிக் கொண்டு வரும் கட்டுரைகளின் தொகுப்பு. பெண்ணை மனித உயிராக மதிக்காமல், அவள் ஆண்களுக்காகப் படைக்கப்பட்டவள் என்ற ஆணாதிக்கப் போக்கை எதிர்த்து, கறுப்பு நிறம் என்றால் தாழ்ந்தது என்ற மனப்பான்மையை எதிர்த்து, உழைக்கும் பெண்களின் அவலநிலையைக் குறித்து, பெண் படைப்பாளர்கள் அவமானப்படுவதை எதிர்த்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தெளிவும், உரத்த சிந்தனையும் நமக்குள் அழுத்தமாகப் பதிகின்றன. திராவிடம் என்பது தமிழர்களின் நலன்களுக்கானதல்ல என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் கட்டுரைகள் நம்மை யோசிக்க வைக்கின்றன. விமர்சனங்களே இல்லாமல் இதுவரை நம்பப்பட்டு வந்த பல கருத்துகள், இந்தக் கட்டுரைகளில் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்த்தும் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. எந்தக் கருத்தைச் சொன்னாலும் அதைத் தெளிவாகவும், விமர்சனக் கண்ணோட்டத்துடனும் சொல்லும் ஆசிரியரின் கூர்மையான பார்வை பாராட்டுக்குரியது. வாழ்வின் பல திசைகளிலும் ஒளி பாய்ச்சும் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நன்றி: தினமணி, 29/12/2014.