பாரதியும் தேசியத் தலைவர்களும்,
பாரதியும் தேசியத் தலைவர்களும், சு. சுப்புராமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், சென்னை, பக். 74, விலை 65ரூ.
மகாகவி பாரதிக்கு காந்தியடிகைள், வ.உ.சி., அரவிந்தர், திலகர், நெல்லையப்பர், பாரதிதாசன், வ.வே.சு. அய்யர் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களுடன் இருந்த உறவுகளையும், வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களையும் தனித்தனி கட்டுரைகளாக விரிவாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். சுவாமி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாவை சந்தித்த பிறகு பாரதி வாழ்வில் ஏற்பட்ட மனமாற்றம், இந்தியா பத்திரிகையை நடத்துவதற்காக பாரதியார் பட்ட துயரங்கள் மற்றும் பாரதியாரின் தந்தை சின்னச்சாமி அய்யர், பாரதியாரின் மனைவி செல்லம்மா ஆகியோரைப் பற்றிய பல அரிய தகவல்களும் நிரம்பியுள்ளன. உன்னைப் பற்றி புதிது, புதிதாகப் பாடல்கள் எழுத என்னைக் கடன் தொல்லையிலிருந்து விடுவிக்காவிட்டால் நான் நாத்திகனாகி விடுவேன் என பாரதியார் வருந்துவதையும், பொய்மை கலவாமலும் வஞ்சகம் இல்லாமலும் எழுதுவதற்கு எனக்குத் தைரியம் கொடு தாயே என பாதி கேட்பதாக கூறும், பாரதியும், பராசக்தியும் என்ற கட்டுரையும் அற்புதம். பாரதியின் வாழ்வில் நடந்த பலவேறு சுவையான நிகழ்வுகளையும், பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய வெளி வராத பல தகவல்களையும் உள்ளடக்கிய அரிய பொக்கிஷம் இந்நூல். நன்றி: தினமணி, 2/2/2015.
—-
இயன்ற வரையில் இனிய தமிழ், க. முருகேசன், வான்புகழ் வளர்த்மிழ் மன்றம் வெளியீடு, விருதுநகர், விலை 60ரூ.
தாய் தமிழில் பிறமொழி கலப்பு தடுக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் எழுதப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 11/2/2015.