இயன்றவரையில் இனிய தமிழ்

இயன்றவரையில் இனிய தமிழ், க. முருகேசன், வான்புகழ் வளர்தமிழ் மன்றம், பக். 128, விலை 60ரூ. செம்மொழி என்ற பெருமையும் பகழும் தமிழ்மொழிக்கு இருந்தாலும் தமிழர்கள் பேசும்போது, தேவையே இல்லை என்றபோதும் பிறமொழிகளைக் கலந்து பேசுவதையே கௌரவமாக நினைக்கிறார்கள். குறிப்பாக ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவதும் எழுதுவதும் பெருகிவிட்டது. இது தமிழ்மொழிக்குச் செய்யும் பெரும் தீங்கு என்பதையே இந்நூலாசிரியர் நூல் முழுதும் அலசியுள்ளார். தக்க உதாரணங்கள் தந்து, அதற்கு இணையான தமிழ்ச்சொற்களையும் வழங்கி தமிழுக்கு உரமூட்டுகிறார். தமிழின் பெருமையை இனிமையை எடுத்து இயம்புகிறார். இயன்றவரை […]

Read more

பாரதியும் தேசியத் தலைவர்களும்,

பாரதியும் தேசியத் தலைவர்களும், சு. சுப்புராமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், சென்னை, பக். 74, விலை 65ரூ. மகாகவி பாரதிக்கு காந்தியடிகைள், வ.உ.சி., அரவிந்தர், திலகர், நெல்லையப்பர், பாரதிதாசன், வ.வே.சு. அய்யர் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களுடன் இருந்த உறவுகளையும், வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களையும் தனித்தனி கட்டுரைகளாக விரிவாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். சுவாமி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாவை சந்தித்த பிறகு பாரதி வாழ்வில் ஏற்பட்ட மனமாற்றம், இந்தியா பத்திரிகையை நடத்துவதற்காக பாரதியார் பட்ட துயரங்கள் மற்றும் பாரதியாரின் தந்தை சின்னச்சாமி […]

Read more