டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை, தமிழில் எஸ். ராஜலட்சமி, அவ்வை இல்லம், ராஜலட்சுமி சீனிவாசன் நினைவு அறக்கட்டளை, சென்னை, விலை 150ரூ.

சாதனையாளரின் சுயசரிதை இந்தியாவின் முதல் பெண் மருத்துவப் பட்டதாரி, சட்டமன்ற உறுப்னிர் என்ற பெருமைகளை அடைந்தவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதியிருந்த சுயசரிதை பல்லாண்டுகள் கழித்து இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ஆங்கில ஆட்சியில் தமிழகம் இருந்த நிலை, இங்கே கொண்டுவரப்பட்ட முக்கியமான பெண்ணுரிமை மற்றும் குழந்தைகள் உரிமை சட்டங்கள் ஆகியவற்றுக்கான பின்புலம், மகளிர் உரிமை இயக்கங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிவதற்கான பின்புலம், மகளிர் உரிமை இயக்கங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிவதற்கான நூலாக இது இருக்கிறது. 1886ல் புதுக்கோட்டையில் பிறந்தவரான முத்துலட்சுமி இளமை முதலே நோய்வாய்ப்பட்டவராக இருந்தாலும் படிப்பில் அசாத்திய வல்லமை கொண்டவராக இருந்தார். அவரது தந்தை அளித்த ஊக்கத்தின் காரணமாகவே அவர் தொடந்து பள்ளிக்குச் செல்ல முடிந்தது. இவர் மருத்துவம் பயின்ற பின்னர் டாக்டர். ரெட்டி இவரைத் தேடிவந்து பெண் கேட்கிறார். எப்போதும் தன்னை சமமாக நினைப்பதுடன் தன் விருப்பங்களில் குறுக்கிடக்சுடாது என்ற நிபந்தனையுடன்தான் அவரைத் திருமணம் செய்துகொள்கிறார். ஒரு மகப்பேறு மருத்துவராக இருந்தபோதும் தன்னுடைய குழந்தைப் பேறின் போது அவர் பாட்ட பாட்டை, தவறான சிகிச்சையை விவரிக்கையில் அதிர்ச்சியாக இருக்கிறது. அவருக்கான கண் நோய் கண்டறிதலும்கூட தாமதமாகவே நடக்கிறது. இந்த பின்னணியில்தான் அவர் ஆதரவற்ற குழந்தைகளுக்காக அவ்வை இல்லம் தொடங்குகிறார். புற்றுநோய் மருத்துவமனை தொடங்குகிறார். மகளிருக்கான திருமண வயதை உயர்த்தி நிர்ணயிக்கப் போராடுகிறார். தேவதாசி முறையை அறவே ஒழிக்க சட்டம் கொண்டுவரப் போராடுகிறார். கடந்த நூற்றாண்டின் சாதனைத் தமிழ்ப் பெண்ணின் இந்த சுயசரிதை ஒவ்வொரு தமிழரும் வாசித்து அறியவேண்டிய ஒன்றாகும். மொழிபெயர்த்த பேரா. ராஜலட்சுமியின் பங்கும் பாராட்டத்தக்கதே. நன்றி: அந்திமழை, 1/2/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *