நான் கண்ட ஜப்பான்
நான் கண்ட ஜப்பான், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ.
இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் மீது 2 குண்டுகளை அமெரிக்கா வீசியது. அதனால் 2 நகரங்கள் அடியோடு அழிந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். லட்சக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். இப்படி பலத்த சேதம் அடைந்த ஜப்பான் கடுமையாக உழைத்து, இன்று பொருளாதாரத்தில் உலகில் மிக முன்னேறிய நாடாக விளங்குகிறது. இந்த நூலின் ஆசிரியரான தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் எத்திராஜன் ராதாகிருஷ்ணன், 23 முறை ஜப்பான் சென்று திரும்பியவர். ஜப்பானின் சிறப்புகளை இந்நூலில் அழகிய நடையில் விவரித்துள்ளார். ஜப்பான் மக்கள் கடும் உழைப்பாளிகள், நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் உடையவர்கள். அங்கு வீட்டு வாடகை மிக அதிகம். இதுபோன்ற விவரங்கள் நிறைய காணப்படுகின்றன. ஜப்பானைப் பற்றி அறிய நல்லதொரு புத்தகம். நன்றி: தினத்தந்தி, 28/1/2015.
—-
உலக அதிசயங்கள், கே. கதிரேசன், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டிடக் கலையில் பிரமாண்டமான, பிரமிக்கத் தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில் சிறந்த ஏழு படைப்புகள் உலக அதிசயங்களாக போற்றப்படுகின்றன. இந்த அதிசயங்கள் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை இந்த நூல் சரித்திர சான்றுகளுடன் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 28/1/2015.