அணு அதிசயம் அற்புதம் அபாயம்
அணு அதிசயம் அற்புதம் அபாயம், என். ராமதுரை, கிழக்கு பதிப்பகம், சென்னை, பக். 168, விலை 100ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-81-8493-143-3.html குழந்தைகளுக்கும் புரியும் விதத்தில் அணு என்றால் என்ன? புரோட்டான், எலக்ட்ரான், நியுட்ரான் என்றால் என்ன? ஐசோடோப் என்றால் என்ன? கதிர்வீச்சு என்றால் என்ன? அணு மின்கலங்கள் நம்பகமானவையா? அணுப்பிளப்புக்கும் அணுச்சேர்க்கைக்கும் என்ன வித்தியாசம்? என அணுவைச் சுற்றிச் சுற்றி அனைத்து விஷயங்களையும் கூறும் நூல். சித்தர்களின் இரசவாதம் மூலம் ஒரு பொருளைத் தங்கமாக மாற்ற முடியாது. ஆனால் செயற்கையான முறையில் தங்கத்தை உருவாக்க முடியும் என்கிறார் நூலாசிரியர். தங்கத்தில் 79 புரோட்டன்கள் உள்ளன. பிளாட்டினத்தில் 78 புரோட்டான்கள் உள்ளன. பாதரசத்தில் 80 புரோட்டான்கள் உள்ளன. பிளாட்டினத்தில் 1 புரோட்டானை அதிகரித்தால் அது தங்கமாகிவிடும். பாதரசத்தில் 1 புரோட்டானைக் குறைத்தால் அது தங்கமாகிவிடும் என்கிறார் நூலாசிரியர். ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டபோது அதன் கதிர்வீச்சுத் தன்மையின் அபாயம் தெரியாமல், கைக்கடிகார முள்களில், இரவில் வீடு திரும்பும்போது பளிச்சென்று தெரிய கதவில் உள்ள சாவித் துவாரத்தைச் சுற்றி ரேடியம் பூசினர். ரேடியத்தின் கதிர்வீச்சால் பலர் நோயுற்று மரணமடைந்ததைத் தொடர்ந்தே அந்தப் பழக்கம் கைவிடப்பட்டது என்பன போன்ற புதிய சுவையான தகவல்களும் இந்நூலில் உண்டு. அறிவியலை எவ்வளவு சுவையாக எழுத முடியும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. நன்றி: தினமணி, 9/3/2015.