பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம், என்.ராமதுரை, க்ரியா பதிப்பகம், விலை 130ரூ. உலகெங்கிலும் பருவநிலை மாறி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கோடையில் வெயில் வழக்கத்தை விடக் கடுமையாக இருக்கிறது. புயல்கள் அதிகரிக்கின்றன. சில இடங்களில் அளவுக்கு மீறி மழை பொழிகிறது அல்லது வறட்சி தலைகாட்டுகிறது. இது ஏன் என்பதை இந்த நூல் எளிமையாக விளக்குகிறது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

அறிவியல் எது?ஏன்?எப்படி?

அறிவியல் எது?ஏன்?எப்படி?, என். ராமதுரை, கிழக்கு பதிப்பகம், விலை 450ரூ. வலி இல்லாமல் அறிவியல் அறிவியல் செய்திகளை எளிமையாகவும் இனிமையாகவும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதுபவர் என்.ராமதுரை. அன்றாட வாழ்க்கையில் நடப்பவற்றை உதாரணங்களாகக் காட்டி அவற்றின் பின்னுள்ள அறிவியல் உண்மைகளை இந்த நூலில் புரிய வைக்கிறார் ராமதுரை. தமிழில் அறிவியலை சுலபமாக விளக்க முடியும் என்பதற்கான சான்றே இந்த நூல். முதல் பாகத்தில் 100 தலைப்புகள், இரண்டாவது பாகத்தில் 95 தலைப்புகள். தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல், வானியல், மருந்தியல் என்று எல்லாப் பிரிவுகளிலும் சிறு […]

Read more

அணு அதிசயம் அற்புதம் அபாயம்

அணு அதிசயம் அற்புதம் அபாயம், என். ராமதுரை, கிழக்கு பதிப்பகம், சென்னை, பக். 168, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-81-8493-143-3.html குழந்தைகளுக்கும் புரியும் விதத்தில் அணு என்றால் என்ன? புரோட்டான், எலக்ட்ரான், நியுட்ரான் என்றால் என்ன? ஐசோடோப் என்றால் என்ன? கதிர்வீச்சு என்றால் என்ன? அணு மின்கலங்கள் நம்பகமானவையா? அணுப்பிளப்புக்கும் அணுச்சேர்க்கைக்கும் என்ன வித்தியாசம்? என அணுவைச் சுற்றிச் சுற்றி அனைத்து விஷயங்களையும் கூறும் நூல். சித்தர்களின் இரசவாதம் மூலம் ஒரு பொருளைத் தங்கமாக மாற்ற முடியாது. […]

Read more