மகாபாரதம் மாபெரும் விவாதம்
மகாபாரதம் மாபெரும் விவாதம், பழ. கருப்பையா, கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.
பன்முக திறமை கொண்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா எழுதியுள்ள இந்த ஆய்வு நூலின் மிக பழமைவாய்ந்த மகாபாரம் இதிகாசத்தை இதுவரையில் யாரும் செய்யாத அளவுக்கு அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து புகழ் மாலையும் சூடியிருக்கிறார். ஆங்காங்கு பல கண்டன கணைகளையும் வீசியிருக்கிறார். மகாபாரதம் என்ற ஆழ்கடலில் மூழ்கி அங்கு இருக்கும் முத்துக்களை மட்டுமல்லாமல், விமர்சனத்துக்குரிய பல கருத்துக்களையும் அடையாளம் காட்டியிருக்கிறார். மகாபாரதத்தை நேசிப்பவர்களுக்கும், அதை முழுமையாக எல்லா கோணங்களிலும் அறிய விரும்புபவர்களுக்கும் பழ.கருப்பையா எழுதியுள்ள மகாபாரதம் மாபெரும் விவாதம் ஒரு அரிய பொக்கிஷம். எடுத்து படிக்க தொடங்கினால் முழுமையாக முடிக்கும் வரை நிச்சயமாக இடையில் மனம் வேறு எங்கும் செல்லாது. நன்றி: தினத்தந்தி, 4/3/2015.
—-
தன்னம்பிக்கை ஒளி, கவிதாசன், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 30ரூ.
தன்னம்பிக்கை ஒளி பரவினால் எண்ணங்களில் எழுச்சியும், செயல்களில் மேன்மையும் உண்டாகும் என்பதை அறிவுறுத்தும் சுயமுன்னேற்ற நூல். நன்றி: தினத்தந்தி, 4/3/2015.