கண்ணதாசனின் வனவாசம்
கண்ணதாசனின் வனவாசம், கண்ணதாசன் ஆடியோஸ், சென்னை, விலை 120ரூ.
கவிஞர் கண்ணதாசன் அவருடைய சுயசரிதையை வனவாசம் என்ற பெயரில் எழுதினார். அந்த நூல் தமிழகத்தில் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. காரணம், தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் எதையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி எழுதியதுதான். இப்போது அதை கண்ணதாசன் ஆடியோஸ் ஒலிவடிவில் டிவிடி-யாக வெளியிட்டுள்ளது. அதாவது கண்ணதாசன் எழுதியதை, அவருடைய மகன்களில் ஒருவரான அண்ணாதுரை கண்ணதாசன், கம்பீர குரலில் ஏற்ற இறக்கத்துடன் சங்கீதக் கச்சேரியைக் கேட்டு ரசிக்கும் உணர்வு ஏற்படுகிறது. முன்பு படித்து ரசித்தவர்கள், இப்போது கேட்டு ரசிக்கலாம். 7 மண நேரம் ஓடக்கூடிய இந்த டிவிடி அழகிய வடிவமைப்பில் வெளிவந்துள்ளது. விலை 120ரூ. கண்ணதாசன் பதிப்பக அதிபர் காந்தி கண்ணதாசனின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. நன்றி: தினத்தந்தி, 15/4/2015.
—-
இந்திய மெய்யியல் பள்ளிகள், பா. அமுல் சோபியா, இராசகுணா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
தென்னிந்திய மெய்யியல்கள், வடநாட்டு மெய்யியல்கள், சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம், சித்தர்கள் என்று பலவற்றைப் பற்றிய பல ஆழமான தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 15/4/2015.