சென்று வா உறவே சென்று வா
சென்று வா உறவே சென்று வா, கவிஞர் தியாரூ, ஜேபிரூபன் பப்ளிகேஷன்ஸ், பக். 122, விலை 100ரூ.
இரண்டே இரண்டு பாத்திரங்கள். தமிழமுதன் மற்றும் வதனா. தமிழமுதன் வதனாவைக் காதலிக்கிறான். காதல் புலம்பல்களாக மட்டும் இல்லாம் சமூக சிந்தனைகளும் அந்த காதல் வெளிப்பாடுகள் ஊடே விரவிக்கிடப்பதுதான் இந்த நூலின் தனிச்சிறப்பு. பிளாட்பாரவாசிகளின் பிள்ளைகளைப் பார்த்தால், நாட்டின் எதிர்காலம் பயங்கரமாக தெரிகிறது. பாவம். ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடாவது, அவர்களுக்கு ஒழுங்காகக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் பட்டினத்தில் சிற்றுண்டிச் சாலைகளுக்கும், தரமிக்க உணவு விடுதிகளுக்கும், ஸ்டார் ஓட்டல்களுக்கும் பஞ்சமே இல்லை. அங்கு தினந்தோறும் எவ்வளவோ உணவு மிச்சமீதியாகி வீணாகிறது. என்ன அநியாயம். ஸ்டார் ஓட்டலுக்குச் சென்றால் இருவருக்கே 2000 அல்லது 3000ரூபாய் செலவாகிறது. இதெல்லாம் என்ன சமூக அமைப்பு? (பக். 55). தமிழ் இலக்கியங்களிலிருந்தும் இருந்தும், ஆசிரியர் மேற்கோள்கள் காட்டுகிறார். -எஸ். குரு. நன்றி: தினமலர், 19/4/2015.
—-
வெற்றிமுகம், நிக்கோலஸ்பிரான்சிஸ், பிரான்சிஸ் பப்ளிகேஷன்ஸ், மதுரை, விலை 120ரூ.
இளைய தலைமுறையினர் தங்களது முகத்தை வெற்றி முகமாக மாற்றுவதற்க்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை ஆணித்தரமாக எடுத்துரைக்க இந்த நூல் உதவுகிறது. நன்றி: தினத்தந்தி, 15/4/2015.