புத்த புனித காவியம்

புத்த புனித காவியம், குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, சென்னை, பக். 368, விலை 250ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-257-5.html உலகளாவிய முக்கிய மதங்களில் ஒன்று பௌத்தம். கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் இதைத் தோற்றுவித்தவர் கௌதம புத்தர். எல்லா மதங்களும் கடவுள் உண்டு என்ற கொள்கையில் தோன்றியவை என்றால், பௌத்தம் மதம் மட்டும் கடவுள் இல்லை என்ற வித்தியாசமான கருத்தில் உருவானது. ஆனாலும் கடவுளுக்கு அடுத்துள்ள தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரை மற்ற மதத்தினர் ஏற்பதைப்போல் புத்தரும் ஏற்கிறார். அதேபோல் ஹிந்து மதத்தின் முக்கிய கொள்கைகளான பிறப்பு, இறப்பு, கர்மா, மறுபிறப்பு ஆகியவற்றை ஏற்கும் புத்தர், வேதங்கள், உபநிஷதங்கள், உயிர்ப்பலி போன்றவற்றை ஏற்கவில்லை. அதே சமயம், கடவுள் இல்லை என்று கூறிய புத்தரையே, அம்மதத்தினர் கடவுளாகப் போற்றி வழிபடுகின்றனர். இப்படி மற்ற சமயங்களிலிருந்து வேறுபட்ட, வித்தியாசமான கொள்கைகளை மக்களுக்குப் போதித்த புத்தர்பிரானின் முழு வாழ்க்கை வரலாற்றையும், அவர் துறவு பெற காரணமான நிகழ்வுகள், அவர் ஞானம் பெற்ற பின் அவர் வாழ்க்கையில் நடந்த பல சுவையான, அற்புதமான சம்பவங்களையும் படிக்க விறுவிறுப்பான முறையில் எளிய உரைநடையில் இந்நூலாசிரியர் இந்நூலில் தொகுத்துள்ளார். இது புத்தரை மட்டுமல்ல, புத்த மதத்தையும், அன்றைய இந்தியாவின் சமய மற்றும் அரசியல் குறித்த விவரங்களையும் இந்நூலில் அறிய முடிகிறது. -பரக்கத். நன்றி: துக்ளக், 7/1/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *