பாரதத்தின் பக்த கவிகள்

பாரதத்தின் பக்த கவிகள், மு. ஸ்ரீனிவாசன், அருள் பதிப்பகம், சென்னை, பக். 264, விலை 175ரூ.

ஒரு காலத்தில், கன்னட அரசால் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு, இரண்டு ரூபாய் விலையில் மக்களுக்கு வழங்கப்பட்ட குமார வியாசகனின், கன்னட பாரதம்; தெலுங்கில் கவித்ரயம் என்று போற்றப்படும் நன்னயர், திக்கணர், எர்ரப்ரகடா என்ற இலக்கிய மூம்மூர்த்திகளால் உருவான, தெலுங்கு மகாபாரதம்; இதிகாசங்களின் மொழிபெயர்ப்புகளாய் மாதவ கண்டாவி இயற்றிய, காலத்தால் முற்பட்ட, அசாமிய ராமாயணம்; தெலுங்கில் பதகவிதா பிதாமகர் எனும் உயர்பட்டம் பெற்ற, அன்னமாச்சார்யா; பண்டரிநாதரை மீட்ட பானுதாசர், ஒரிய மகாபாரதம் இயற்றிய சரளாதாசர், தமிழகத்தில் அருணகிரிநாதர் முதல் கவியோகி சுத்தானந்த பாரதி வரை, 34 பக்த கவிகளை பற்றிய கட்டுரைகள் இதில் அடக்கம். ‘யாழ்ப்பாணம் சைவ தலைவர் ஆறுமுக நாவலர், வள்ளலாரது பாக்கள் அருட்பா அல்ல, மருட்பாவே என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் (பக். 227) என்பது தவறான தகவல். வள்ளலார் மற்றும் சில தீட்சிதர்கள் மீது, ஆறுமுக நாவலர், மஞ்சக்குப்பம் (கடலூர்) நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தார். -பின்னலூரான். நன்றி: தினமலர், 17/5/2015.  

—-

அல்லாஹ்வை அறிந்து கொள் அன்பு மகனே, ஸலாமத் பதிப்பகம், சென்னை, விலை 40ரூ.

ஒரு தாய் மகனுக்குச் சொல்வதைப் போல இறைவனை (அல்லாஹ்) பற்றியும், அவருடைய படைப்புகள் குறித்தும் கேள்வி – பதில் பாணியில் கூறும் நூல். பள பளப்பான காகிதத்தில் வண்ணப்படங்கள். இந்த நூல் குழந்தைகளைக் கவரும். நன்றி: தினத்தந்தி, 20/5/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *