எரியத் துவங்கும் கடல்
எரியத் துவங்கும் கடல், அ. வெண்ணிலா, அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 275ரூ.
எளிமையான வார்த்தைகள் ஆனால் அவற்றில் ஏராளமான எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் கருத்துகள் என்று இந்த புத்தகம் முழுவதும் உள்ள அனைதுது கவிதைகளும் படித்து சுவைக்கும் வண்ணம் ஆக்கப்பட்டுள்ளன. இந்த கவிதைகள் நான் வாழ்வதின் சாட்சியங்கள் என்று அதன் ஆசிரியர் அ. வெண்ணிலா கூறுவதை மெய்ப்பிக்கும் வகையில் ஒவ்வொரு கவிதையிலும் உள்ளத்து உணர்ச்சிகள் பிரவாகம் எடுத்து ஓடுகின்றன. கவிதைகள் என்றவுடன் சற்று தயங்குபவர்களைக்கூட கட்டிப்போடும் வகையில் சிறிய வரிகளில் சிறந்த கருத்துக்களையும் குடும்ப உறவுகளின் உண்மைகளையும் படம் பிடித்துக் காட்டி இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 27/5/2015.
—-
100 மரங்களின் பயன்கள், மணிமேகலை பிரசுரம், சென்னை, விலை 120ரூ.
நம் வாழ்வோடு இணைந்த 100 மரங்களின் பயன்களை இந்த நூலில் முனைவர் பி. சாந்தன் எடுத்துக் கூறுகிறார். மாணவர்களும், மரங்களைப் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்களுக்கும் பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 27/5/2015.
—-
சமையல் கணக்கு, செப் க. ஸ்ரீதர், விகடன் பிரசுரம், சென்னை, விலை 185ரூ.
158 சைவ, அசைவ உணவுகளை சமைப்பது எப்படி என்பதை விளக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 27/5/2015