உல்லாசக் கப்பல் பயணம்

உல்லாசக் கப்பல் பயணம், கிருத்திகா, தமிழ் காமிக்ஸ் உலகம் வெளியீடு, சென்னை, விலை 200ரூ.

To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024753.html உல்லாசக் கப்பல் பயணம் ஓர் அனுபவம் ஆசியாவைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்து மக்கள் மத்தியிலும் கேளிக்கைகள் மற்றும் உல்லாசச் சுற்றுல்லாக்கள் இக்காலத்தில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் க்ரூஸ் என்றழைக்கப்படும் உல்லாசக் கப்பலில் ஐந்து நாட்கள் மேற்கொண்ட பயண விவரங்களைச் சற்று கற்பனை கலந்து இந்நூலில் சிங்கப்பூரைச் சேர்ந்த கிருத்திகா எழுதியுள்ளார். ஒரு உல்லாசக் கப்பல் எப்படியிருக்கும் என்பதைச் சராசரி மக்கள் டைட்டானிக் போன்ற பிரபல திரைப்படங்கள் வழியாகவே அறிந்திருப்பார்கள். பயணத்துக்கு முந்தைய நாட்களில் பயண ஏற்பாடுகளைச் செய்வது தொடங்கி அனைத்து விவரங்களையும் வண்ணப் புகைப்படங்களுடன் சுவாரசியமாக விவரித்துள்ளது இந்நூல். ஐந்து நாளில் கப்பலிலேயே அரும்பும் காதல் கதை ஒன்றும் இடம் பெறுகிறது. அறைகளின் வரைப்படம் தொடங்கி நீச்சல் குளம், திரையரங்கு வரை கப்பலின் அனைத்து அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. உல்லாசக் கப்பல் குறித்து எல்லோருக்கும் பொதுவாக எழும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கும் கேள்வி பதில் என்று தனியாக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்ந்த எழுத்தாளரின் நடையில் இல்லாவிட்டாலும் ஒரு உல்லாசக் கப்பலில் ஐந்து நாட்கள் எப்படியிருக்கும் என்பதை சுவாரசியமாகச் சொல்வதால்இப்புத்தகம் கவனிக்கத் தக்கது. நன்றி: தி இந்து, 9/5/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *