முக்கோணக் கிளிகள்
முக்கோணக் கிளிகள், சி.ஜெயபாரதன்(கனடா), தாரிணி பதிப்பகம், சென்னை, பக். 92, விலை 75ரூ.
முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணலாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதத்தில் இம்முக்கோணக் காதல் கதை படக் கதையாக நூல் வடிவம் பெற்றுள்ளது. கனடா எழுத்தாளர் சி. ஜெயபாரதன், சிவா-சித்ரா-அவள் தாய் புனிதா ஆகியோரின் முக்கோணக் காதலில் ஜெயிப்பது யார்? என்ன காரணம்? அது சரியா? என்பதை சுவைபட எழுதியுள்ளார். ஓவியர் தமிழின் ஓவியங்கள் கதைக்கு உயிரூட்டுகின்றன. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/6/2015.
—-
மனஅலசல், க. செல்லப் பாண்டியன், கார்முகில் பதிப்பகம், பக். 170, விலை 110ரூ.
சமகால சமூக, அரசியல், கலாச்சாரம், சாதியும் போன்றவற்றை ஆய்வுப் பொருளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மன அலசல்களின் ஆய்வியல் நூல் இது. சமூகம், அரசியல், கலாச்சார நிகழ்வில் ஊடுருவி சமூகத்தின் லட்சணங்களை அடையாளம் காண உதவும் ஆய்வு முறை இது. சுருக்கமாக சமூக கலாச்சாரப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள இந்த மன அலசல் பயன்படும் என்பது நூலாசிரியரின் அசைக்க முடியாத கருத்தாக்கமாக உள்ளது. நன்றி: குமுதம், 22/6/2015.