பெரியார் களஞ்சியம்
பெரியார் களஞ்சியம், தொகுப்பாசிரியர் கி. வீரமணி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், சென்னை, விலை 210ரூ.
தந்தை பெரியார் எழுதிய, பேசிய கருத்துகள் ஏற்கனவே ஏராளமான புத்தகங்களாக பிரசுரமாகி உள்ளன. அந்த வரிசையில் பெரியார் களஞ்சியம் என்ற தலைப்பில் 35 தொகுதிகள் வெளிவந்துள்ளன. 36வது தொகுப்பாக கடவுள் – புராணங்கள் (பாகம் 4) என்ற புத்தகம் வெளியாகி உள்ளது. 1959ம் ஆண்டு முதல் 59ம் ஆண்டு ஜனவரி வரை பெரியார் பேசிய கடவுள் மற்றும் புராணங்கள் பற்றிய கருத்துகள் இதில் இடம் பெற்றுள்ளன. கடவுள், ஜாதி, மதம், தீண்டாமை ஒழிப்பில் பெரியாருக்கு இருந்த வேகத்தை இந்தக் கட்டுரை தொகுப்பின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 5/8/2015.
—-
தமிழ் முறையில் அக்கு பங்சர், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 120ரூ.
தமிழகத்தில் சித்தர்கள் கண்ட வர்மக்கலை, சீனர்களால் செழுமை ஆக்கப்பட்டு இன்று அக்கு பங்சர் என்ற பெயரில் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இது குறித்து பல நூல்கள் வெளியாகியுள்ள போதிலும் தமிழ் மொழியின் தாக்கம் குறைவாகவே இருந்தது. அதைப் போக்கும் வகையில் அக்கு பங்சர் மருத்துவ முறைகளை ஆசான் ஆ. மத்தியழகன் தமிழில் விவரித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.