இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு, தமிழில் எஸ். ராமன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ.

ஒரு நகரத்தையே உருவாக்கிய இலங்கைத் தமிழரின் சாதனை! பிரமிப்பூட்டும் தன்னம்பிக்கை நாயகன், மஹா சின்னத்தம்பியின் வாழ்க்கையை விவரிக்கும் நூல் இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு. பசி, பட்டினியுடன் வளரும் இலங்கை அகதி தமிழரான அவரது மனதுக்குள் பெருங்கனவு ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு சமயத்தில் வெறும் திட்டத்தைக் காட்டி, 3 ஆயிரம் ஏக்கர் இடத்தை ஒப்பந்தத்துடன் விலை பேசுகிறார். முதலீடு செய்பவர்களை ஈர்த்து, ஆஸ்திரேலியாவுக்கே பெருமை சேர்க்கும் ஸ்பிரிங்பீல்டு நகரத்தை தனிபராக நிர்மாணிக்கிறார். ஒருமுறை ஒரு டாலர் கரன்சியை முன் பணமாக கொடுத்து ஒரு கோடிக்கான ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள வைப்பது அவரது சாதுர்யத்துக்கு சான்று. சாதாரணமானவர்களையும் சாதிக்கத் தூண்டும் தன்னம்பிக்கை நூலை மொழிபெயர்த்து வழங்கிய நூலாசிரியர் எஸ்.ராமன் பாராட்டுக்குரியவர். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *