தமிழில் அறிவியல் புலம்
தமிழில் அறிவியல் புலம், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், பக். 96, விலை 50ரூ.
எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், இதழ்களும் தமிழ் மொழியில் செய்யும் பிழைகளைச் சுட்டிக்காட்டி, இடித்துரைத்துத் தெளிய வைக்கிறார். நூலைப் படிப்போர் தமிழின் சிறப்புகளை உணர்வர். தெ.பொ.மீ., மு.வ., ராதாகிருஷ்ணன் ஆகிய பேராசிரியர்கள், கவிஞர் வாலி ஆகியோர் பற்றிய அவர்தம் கருத்துகள் நூலில் ஒளிர்கனிற்ன. பன்மொழிப் புலமைமையில் மு.வ., அவர்களைத் தெ.பொ.மீ. யோடு நிகராக்க இயலாது என, குறிப்பிட்டுள்ளமை, மனத்தை தொடுகிறது. ஆங்காங்கே நூலாசிரியரின் தன் வரலாற்றுச் செய்திகளையும் காண்கிறோம். பெயர் சுட்டப் பெறாமல் காந்தியவாதி ஒருவரைப் பற்றி எழுதியுள்ள கட்டுரையை மீண்டும் மீண்டும் படித்தாலும் அவர் யார் என, அறிய இயலவில்லை. நூலை மீண்டும் படித்தால் அது கட்டுரை இல்லை. சிறுகதை என உணர இயல்கிறது. எழுத்துப் பிழைகள் பலவும் அச்சுப் பிழைகளே. அடுத்த பதிப்பு செம்பதிப்பாக வெளிவரும் என நம்பலாம். தமிழர்கள் அனைவரும் படித்து, தமிழ் மொழி அறிவை வளப்படுத்திக் கொள்ள உதவும் நல்ல நூல். – பேரா. ம.நா. சந்தானகிருஷ்ணன். நன்றி: தினமலர், 12/7/2015.