உன்னை நீ மறந்தேன்?
உன்னை நீ மறந்தேன்?, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
எனக்காக வாழ்வது தவறா? என் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நான் யார்? போன்ற கேள்விகளுக்கும், வாழ்க்கையின் சவால்கள், ஆன்மிக விழிப்புணர்ச்சி ஆகியவற்றுக்குமான விளக்கங்கள் இந்நூலில் விவரித்து கூறியுள்ளார் மனோதத்துவ நிபுணர் அ. கீதன். நன்றி: தினத்தந்தி, 26/8/2015.
—-
தமிழக விழிப்பின் முன்னோடி ஜி. சுப்பிரமணிய அய்யர், பூங்கொடி பதிப்பகம், சென்னை, விலை 80 ரூ.
திருவையாற்றில் 1855ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி பிறந்த ஜி. சுப்பிரமணிய அய்யர், சுதேசமித்திரன் பக்திரிகையை 1882ம் ஆண்டு வார இதழாகத் தொடங்கினார். பிறகு அது தினசரிப் பத்திரிகையாக மாறியது. மகாகவி பாரதியார், துணை ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிகை சுதேசமித்திரன். சுதந்திரப்போரின்போது சிறை சென்றவர், சுப்பிரமணிய அய்யர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியுள்ளார் பெ.சு.மணி. நன்றி: தினத்தந்தி, 26/8/2015.