இயன்றவரையில் இனிய தமிழ்
இயன்றவரையில் இனிய தமிழ், க. முருகேசன், வான்புகழ் வளர்தமிழ் மன்றம், பக். 128, விலை 60ரூ.
செம்மொழி என்ற பெருமையும் பகழும் தமிழ்மொழிக்கு இருந்தாலும் தமிழர்கள் பேசும்போது, தேவையே இல்லை என்றபோதும் பிறமொழிகளைக் கலந்து பேசுவதையே கௌரவமாக நினைக்கிறார்கள். குறிப்பாக ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவதும் எழுதுவதும் பெருகிவிட்டது. இது தமிழ்மொழிக்குச் செய்யும் பெரும் தீங்கு என்பதையே இந்நூலாசிரியர் நூல் முழுதும் அலசியுள்ளார். தக்க உதாரணங்கள் தந்து, அதற்கு இணையான தமிழ்ச்சொற்களையும் வழங்கி தமிழுக்கு உரமூட்டுகிறார். தமிழின் பெருமையை இனிமையை எடுத்து இயம்புகிறார். இயன்றவரை இனிய தமிழில் பேச வேண்டும், எழுதவேண்டும் என்ற நூலாசிரியரின் முயற்சி அவரது தமிழமொழிப்பற்றுக்குச் சான்று. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 14/9/2015.