மீண்டும் ஆரியரைத் தேடி
மீண்டும் ஆரியரைத் தேடி, த. தங்கவேல், வெளியீடு சமூக இயங்கியல் ஆய்வு மையத்திற்காக, கோவை, விலை 240ரூ.
தமிழக அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அதிகாரியும், பொறியாளரும், வரலாற்று ஆய்வாளருமான த.தங்கவேல் நீண்ட ஆய்வுகளை நடத்தி, வரைபடங்களுடன் தொகுத்த நூல் மீண்டும் ஆரியரைத் தேடி. இதில் ஆரியர்கள் என்றால் யார்? அவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களா? எங்கிருந்து, எப்போது வந்தார்கள்? அவர்களின் முக்கியமான அடையாளங்கள் என்ன? என்பன போன்ற விஷயங்களை மிக ஆழமாக ஆய்வு செய்து வெளியிட்டு இருக்கிறார். தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு இலக்கணம் வகுத்தும், பிராமி, தமிழி ஆகிய இரு எழுத்து முறைகளை அறிமுகப்படுத்தியவர்கள் தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்த ஆறிஞர்களே என்பதை ஆதாரத்துடன் நூலாசிரியர் விளக்கிஉள்ளார். ஆரியர் என்ற சொல் ஒரு இனத்திற்கு மட்டும் உரித்தானது அல்ல? என்பதை மிக தைரியமாகவும், ஆணித்தரமாகவும் நூலாசிரியர் விளகிக உள்ளார். நன்றி: தினத்தந்தி.