ஸ்ரீமத் வால்மீகி இராமாயண இரத்தினங்கள்
ஸ்ரீமத் வால்மீகி இராமாயண இரத்தினங்கள், டி.எம்.சுந்தரராமன், திருவரசு புத்தக நிலையம், பக். 224, விலை 100ரூ.
இந்திய திருநாட்டின் இரு கண்களாக ராமாயணம், மகாபாரதம் என்ற இரு இதிகாசங்கள் விளங்குகின்றன. வால்மீகியின் ராமாயணத்தில், முத்தான சில பகுதிகளை, இந்த நூல் தருகிறது. பரதனுக்கு ராமன் சொன்ன அறிவுரைகள், இன்றைக்கும் பொருந்துவதாக இருப்பதும் (பக். 10), நிதிக்குவியல் போன்ற நீதிக் கருத்துகளும் (பக். 13-39), மகாவிஷ்ணுவிற்கே சாபம் கிடைத்ததும் (பக். 64), வால்மீகி ராமாயணத்தில் வரும் பல பழமொழிகளும் (பக். 87 -93), எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய உண்மைகளும் (பக். 15, 31, 57), பாவச்செயல்கள் பட்டியலும் (பக். 158 – 161), மயிலுக்கு அழகிய தோகை வந்தது எப்படி (பக். 169 – 173), ராமாயண காலத்திலே தெரிந்திருந்த அறிவியல் உண்மைகளும் (பக். 145 – 152), நூலாசிரியரால் எளிய தமிழில் விளக்கப்பட்டு இருக்கின்றன. பலரும் அறியாத ஸ்ரீ ராமஸ்துதி, இந்நூலில் இணைக்கப்பட்டு இருக்கிறது. -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 1/11/2015.