இஸ்லாமும் ஜீவகாருண்யமும்
இஸ்லாமும் ஜீவகாருண்யமும், கவி.கா. மு. ஷெரீப், கலாம் பதிப்பகம், பக். 80, விலை 50ரூ.
கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், விடுதலைப் போராட்டவீரர், சீறாப்புராண உரையாசிரியர் என்று பன்முக அடையாளம் கொண்ட கவி.கா. மு. ஷெரீப், தமிழ் இலக்கியத்துக்கு இஸ்லாமிதயர் ஆற்றியிருக்கும் அரும்பணிக்கு அடையாளமாகவும் திகழ்பவர். உயிர் நேயம் மனித உணர்வின் உச்சம். இதை இஸ்லாம் இயல்பான வாழக்கை முறைக்குள் எந்தளவு நடைமுறைச் சாத்தியமாகியிருக்கிறது என்பதை தனது ஆய்வு அறிவின் மூலம் ஆதாரங்களோடு விளக்கும் நூல் இது. சமூக நல்லிணக்கம் நாடுவோர் அவசியம் படிக்க வேண்டிய நூல். இளந்தலைமுறையினருக்கு வழிகாட்டியும் கூட. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 30/11/2015.
—-
சிவா ஐ.ஏ.எஸ்., என் ரிசிகேசன், நவமணி வெளியீடு, பக். 191, விலை 150ரூ.
நேர்மையான திறமைமிக்க அரசு அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகள் கொடுக்கும் தொல்லைகள் அதனால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக்காட்டி, அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் தங்கள் கடமையை மறந்து, எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு நாடக நூல். நாட்டின் அரசியல், கட்சிகளின் குறுக்கீடுகள், மக்களின் பொறுப்பற்ற தன்மை, பேரங்கள், லஞ்ச லாவண்யம், உழைக்காமல் உயர் பதவிக்கு வரத் துடிப்பவர்களின் செயல்பாடு என்று ஒன்றுவிடாமல் விமர்சிக்கிறார் ஆசிரியர். ஆதிகாலம் தொட்டு தமிழர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பதை ஆணி அடித்ததுபோல் நாடகவழி சொல்லிப்போவது சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 30/11/2015.