நேரு குடும்ப வரலாறு

நேரு குடும்ப வரலாறு, முஹம்மத் யூனுஸ், விகடன் பிரசுரம், விலை 210ரூ.

பொது வாழ்க்கையில், குறிப்பாக அரசியலில் மனிதர்கள் எப்படி சந்தர்ப்பவாதிகளாகி, சுயநலம் பேணி, நாட்டையும் மக்களையும் மறந்து, மாறி விடுகின்றனர் என்றும், உண்மை நண்பர்கள், பகைவர்கள் எப்படி செயல்பட்டனர் என்றும் ஒரு 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் பல முக்கிய முடிவுகள் எப்படி விளைந்தன என்றும் சுவைபட கூறுகிறது இந்த நூல். நான்கு பகுதிகளாக இந்நூல் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக காந்தீய கொள்கைகளை, சுதந்திரப்போராட்டம் – அதற்காக ஏற்பட்ட இன்னல்களை, இடர்களை தெளிவாக்குகிறது. இரண்டாவதாக இந்தியாவை முற்போக்கு நாடாக்க நேரு கையாண்ட உத்திகள் விளக்கப்படுகிறது. மூன்றாவதாக இந்திராவின் 11 ஆண்டு கால ஆட்சி பற்றியும், இறுதியாக நெருக்கடி நிலை, அதற்கான அவசியம், அதன் சாதனைகள் – குறைகள், அவற்றால் இதுவரை இந்தியா கண்டிராத அளவு நாட்டிற்கு ஏற்பட்ட சத்திய சோதனைகள் எல்லாம் விளக்கப்படுகின்றன. விடுதலைப் பிறகான நம் நாட்டு அரசியலில் இன்றுவரை கோலோச்சி வருகிறது பண்டித நேருவின் குடும்பம். இது எப்படி சாத்தியம்? நேருவின் தொடர்ச்சியாக, இந்திராவின் வருகை இந்திய அரசியலை எப்படி மாற்றியது? இந்திராவின் ஆலோசகரும், இந்நூலாசிரியருமான முஹம்மத் யூனுஸ் தன் அரசியல் அனுபவங்களை விவரித்திருப்பதை தமிழில் மொழி மாற்றம் செய்திருக்கிறார் எ.பொன்னுசாமி. நம் தேசத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 6/1/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *