ஒருபிடிமண்
ஒருபிடிமண், இயக்குனர் ஸ்ரீதர், விஜயா பப்ளிகேஷன்ஸ், பக். 136, விலை 100ரூ.
இயக்குனர் ஸ்ரீதரின் பெயரை தவிர்த்துவிட்டு, தமிழ் திரை வரலாற்றை எழுத முடியாது. அவர் கைவண்ணத்தில், சிவாஜி, முத்துராமன், கே.ஆர். விஜயா ஆகியோர் நடிக்க இருந்த படம் 1965ல் நடந்த, இந்தியா – பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்ததால் கைக்கூடவில்லை. இந்த திரைக்கதை ‘பொம்மை’ சினிமா இதழில் தொடராக வெளிவந்தது. தற்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. கர்னல் ரங்கதுரை கதாபாத்திரம் இடம்பெறும் போதெல்லாம், நம் கண்முன் சிவாஜி தெரிவது அற்புதமான அனுபவம். கதாபாத்திரங்களின் தேர்வே, திரைப்படத்தின் வெற்றியை, பாதி உறுதி செய்துவிடும் என்பர். அந்த வகையில் ஸ்ரீதர் திறமைசாலி என்பதை, இந்த கதையை படிப்போர் உணர்வர். தன் இரு மகன்களையும், போர்க்களத்தில் இழந்தபின், ‘போருக்கு அனுப்ப, எனக்கு இன்னொரு மகன் இல்லையே’ என ரங்கதுரை வருத்துப்படும், ‘கிளைமாக்ஸ்’ – அது ஸ்ரீதரின் டச்! -சி. கலாதம்பி. நன்றி: தினமலர், 3/1/2016.