பின்நவீனத்துவம்
பின்நவீனத்துவம், தொடக்கநிலையினருக்கு, ஜிம் பவல், தமிழில க. பூரணசந்திரன், அடையாளம், பக். 164, விலை 160ரூ.
வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கான ஒரு புதிய சிந்தனை முறை பின்நவீனத்துவம். எனினும் இந்தப் பின்நவீனத்துவத்தைப் புரிந்து கொள்வதே பலருக்கு மிக மிகச் சிரமமான ஒன்று. பின்நவீனத்துவத்தை எளிய முறையில் புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் கேள்வி – பதில் வடிவில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூல் முழுக்க ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. மார்க்சியம், கிறிஸ்தவம் அல்லது அறிவியல் என்பதன் உலகப் பொதுவான கொடியின் கீழ் எல்லா உலகமும் ஒரு காலத்தில் ஒன்று சேரும் என்பதை பின் நவீனத்துவம் ஏற்றுக்கொள்வதில்லை. பல்வேறு கலாசாரங்களால் ஆன ஒரு விழாக் கொண்டாட்டம்தான் இந்த உலகம் என்று பின்நவீனத்துவவாதிகள் கருதுகின்றனர். உலகம் பல முரண்பாடுகள் கொண்ட, பல உலகப் பார்வைகளைக் கொண்டுள்ளது. உலகில் ஓர் உண்மை, ஒரு யதார்த்தம் என்பதெல்லாம் இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது. எந்தக் கருத்தாக இருந்தாலும் அது இன்றைய நடைமுறை வாழ்க்கைப் பொருந்துகிறதா? என்பதைப் பொருத்திப் பார்த்து, அதன் உண்மையைத் தன்மையைக் கண்டறிய விரும்புகிற யாரும், இந்த நூலை விமர்சன நோக்கில் எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பதே உண்மை. நன்றி: தினமணி, 12/12/2015.