மனப்பலகை
மனப்பலகை, பரமன் பச்சைமுத்து, மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ.
மொத்தம் 31 சிறுகதைகள் கொண்ட புத்தகம். “எழுதுவதை புதுமையாக எழுத வேண்டும்” என்ற ஆசிரியரின் எண்ணம் கதைகளில் பிரதிபலிக்கிறது. கதைகள் ரத்தினச் சுருக்கமாக அமைந்துள்ளன. “காலமாகிப்போன கணவருக்கு மனைவி எழுதும் கடிதம்” மனதைத் தொடுகிறது. சில கவிதைகளை புதுக்கவிதை பாணியில் எழுதியிருப்பதை ‘புதுமை’ என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால் “வாழ்க்கை ஒரு தீராநதி”யில், சிவாஜிகணேசன், இளையராஜா, கண்ணதாசன், சுஜாதா, ஜெயகாந்தன் முதலிய சாதனையாளர்களைப் பற்றி தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். அதை சிறுகதை என்று எப்படி கூறுவது? நல்ல கட்டுரை என்று கூறலாம். நன்றி: தினத்தந்தி, 24/2/2016.
—-
மாதவியின் மாண்பு, சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், விலை 60ரூ.
சிலப்பதிகார மாண்புகளில் மாதவியின் மாண்பு குறிப்பிடத்தக்கது. இளங்கோவடிகளின் எழுதுகோல், பிறப்பால் பரத்தையான மாதவி நல்லாளை மாண்புடைய பத்தினியாக்கியதோடன்றி அந்தப் பத்தினியையும் துறவியாக்கியது. பூம்புகார் மாதவியின் மாண்பு கண்டு தமிழ்த்தாயர் குலம் பெருமிதம் கொள்ள வேண்டும் என திறனாய்ந்து தெளிவுபடுத்தியிருக்கிறார் சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம். நன்றி: தினத்தந்தி, 24/2/2016.