பாரதிதாசன் காதல் ஓவியங்கள்
பாரதிதாசன் காதல் ஓவியங்கள், டாக்டர் எஸ். ஜெகத்ரட்சன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், விலை 100ரூ.
உலகில் ஒவ்வோர் உயிரும் காதலின்றி வாழ்வதில்லை. காதலைப் பாடாத கவிஞன் இல்லை. காதலைப் பாடவில்லை என்றால் அவன் கவிஞனே இல்லை” என்பார்கள். ‘காதல் என்பது உயிர் இயற்கை’ என்று கூறும் பாவேந்தர் பாரதிதாசன், தனிப்பாடல்களிலும், கதைப்பாடல்களிலும், காப்பியங்களிலும் ஆண்-பெண்களிடையே இருந்து வரும் தூய அன்பை-காதலை பல கோணங்களில் வர்ணிக்கிறார். புரட்சிக் கவிஞர் என்ற பெயரை பெற்ற அவர், காதலிலும் புரட்சி செய்தவர். விதவையர் காதலுக்கும், சாதி மதம் கடந்த காதலுக்கும் அவர் வித்தூன்றியவர். காதல் இயக்கத்தை சமூகத்தில் மாசு உண்டாக்காமல் எடுத்துக்காட்டியவர் பாரதிதாசன். அவரது காதல் பாடல்களில் உள்ள நயங்களையும், இலக்கியச் சுவைகளையும் இந்த நூலில் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் அழகிய முறையில் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 17/2/2016.
—-
பரிசலில் ஒரு பயணம், ஜி.மீனாட்சி, சாந்தி நூலகம், விலை 80ரூ.
சிறுவர்களுக்கான 11 சிறுகதைகள் கொண்ட புத்தகம். சிறுவர்களை நல்வழிப் பாதையில் அழைத்துச் செல்லும்விதத்தில் கதைகளை எழுதியுள்ளார். எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஜி.மீனாட்சி. குழந்தைகளுக்குப் பரிசளிக்க ஏற்ற புத்தகம். நன்றி: தினத்தந்தி, 17/2/2016.