அணுத்துகள்

அணுத்துகள், க. மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 196, விலை 160ரூ.

அறிவியலை மிக எளிமையாக எழுத முடியும் என்பதற்கு இந்நூலே சான்று. உலகின் எல்லாப் பொருட்களுக்கும் அடிப்படையான அணுவைப் பற்றி மிக விரிவாக இந்நூல் கூறுகிறது. அணுவோடு தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் எளிமையாக, சுவையாக நூல் விளக்குகிறது. உதாரணமாக ‘ரயில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருக்கும்போது நிற்காமல் படுவேகத்தில் கடந்து செல்லும் ரயிலின் சங்கொலி படிப்படியாகச் சுருதி குறைந்து கீழ் ஸ்தாயிக்கு நகர்வதை ஒலியியலில் டாப்ளர் விளைவு என்பார்கள். ‘விசைத்துகள்களை தாதுத் துகள்கள் என்று அழைக்கிறார்கள். கால்பந்து மைதானத்தில் ஆட்டக்காரர்களை ஒன்றாகக் கூடி விளையாட வைப்பது அவர்கள் உதைத்துப் பரிமாறிக்கொள்ளும் பந்துதானே! ஆட்டக்காரர்களை ஒன்றாகக் கூடி விளையாட வைப்பது அவர்கள் உதைத்துப் பரிமாறிக்கொள்ளும் பந்துதானே! ஆட்டக்காரர்களை ஒன்றாக இணைக்கும் பாலமாக பந்து விளங்குவதுபோல, தூதுத் துகள்களும் நிஜத்துகள்களை உறவாட வைக்கின்றன. ‘அறிவியலை விமர்சனம் செய்யக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. மறுபரிசீலனைகளும் திருத்தங்களும்k  எப்போதுமே அவயிம்தான். பார்க்கப்போனால் அணுவைப் பற்றிய முழுமையான கருத்து இன்றுவரை கிடைக்கவில்லை’ என்பன போன்றவற்றைச் சொல்லலாம். அறிவியல் நூலாக இருந்தாலும், ஆன்மிகத்தைப் பற்றியும் நூல் பேசுகிறது. ‘விளக்கம் அல்லது பிரச்னைகளுக்கான தீர்வு என்று வந்துவிட்டால், ஆன்மிகம் தரும் விளக்கங்களுக்கும் மதிப்புக் கொடுத்தாக வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. ஆன்மிக விளக்கங்களும் விளக்கங்களே. அதை தருகின்ற தீர்வுகள் எளிமையாகவும், அறிவதற்குத் துணையாகவும் பொருத்தமானதாகவும் இருக்குமானால் அவையும் விஞ்ஞானமே” என்கிறார் நூலாசிரியர். அணு அறிவியலைத் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினமணி, 07/3/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *