கலாங்காதிரு பெண்ணே
கலாங்காதிரு பெண்ணே, விகடன் பிரசுரம், விலை 105ரூ.
பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும் கூறுகின்ற புத்தகம் இது. குறிப்பாக “தாய்மை” என்ற பகுதியில் பெண்கள் கர்ப்பம் தரித்தது முதல், குழந்தை பிறப்பது வரை எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பது விரிவாக விவரிக்கப்படுகிறது. தற்காலத்தில் ‘சிசேரியன்’ ஆபரேஷன் செய்துகொள்வதை பல பெண்கள் விரும்புகிறார்கள். அந்த ஆபரேஷனை எப்போது செய்துகொள்ளலாம், எப்போது செய்து கொள்ளக் கூடாது என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. எல்லாப் பெண்களும் படித்துத் தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு மிக அவசியமான புத்தகம். நன்றி: தினத்தந்தி, 16/3/2016.
—-
உயில்களின் சட்டம், என். சிவரமன், அருள்மொழி பிரசுரம், விலை 80ரூ.
“உயில்” பற்றிய அனைத்து விவரங்களையும் கூறும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 16/3/2016.