ராமாயணம்

ராமாயணம், தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 275ரூ.

சமஸ்கிருத மொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்துக்கும், தமிழில் கம்பர் எழுதிய ராமாயணத்துக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. இதுபோல், மாறுபட்ட தகவல்களுடன் வேறு சில ராமாயணங்களும் இருக்கின்றன. பல்வேறு ராமாயணங்களையும் படித்து ஆராய்ந்த தேவி வனமாலி, கேரளாவை சேர்ந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். கங்கை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து, அங்கேயே வசித்து வருகிறார். அவர் ராமாயணத்தை ஆங்கிலத்தில் எழுதினார். பலராலும் பாராட்டப்பட்ட அந்த நூலை நாகலட்சுமி சண்முகம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். எழில் கொஞ்சும் சரளமான நடை. ராமாயணம் எல்லோரும் அறிந்த கதை என்றாலும், அதை அனைவரும் எளிதில் புரிந்து கொண்டு, ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மொழி பெயர்ப்பாளர் முழு வெற்றி பெற்றுள்ளார்.

நன்றி: தினத்தந்தி, 23/3/2016.

 

—-

விண்வெளிப் பயண காவியம், சிற்பி பாமா, சிற்பி பதிப்பகம், விலை 50ரூ.

விண்வெளிப்பயணம் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இது புதுமையான புத்தகம். விண்வெளிப்பயணத்தை புதுக்கவிதை வடிவத்தில் எழுதியுள்ளார் சிற்பி பாமா.

நன்றி: தினத்தந்தி, 23/3/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *