பொன்னகரம்
பொன்னகரம், அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், விலை 230ரூ.
மைய நீரோட்டம் எனச் சொல்லப்படும் உலகில் இருப்பவர்கள் நுழையத் தயங்குகிற சாம்பல் உலகத்தில் வெளிச்சத்தைத் தேடுகிற நாவல் இது. கதைக்களம், கதை மாந்தர்கள், அதில் வெளிப்படுத்தக்கூடிய வாழ்வு ஆகியவை நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளது.
‘பொன்னகரம்’ வெளியில் இருப்பவர்களுக்கு ஒரு சிறிய காலனி. ஆனால் அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு ஊர். அந்த ஊரின் பொதுத்தன்மை சாம்பல் நிறம். அந்தச் சாம்பல் நிற உலகத்தில் யார் யாரெல்லாம் குற்றாவாளிகள், குற்றம் என்றால் என்ன என்பது குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது.
நகரத்தின் வளர்ச்சிப் பசி தின்று தீர்த்த அந்த உலகத்தின் யதார்த்தங்களையும் விழுமியங்களையும் தேடிச் சென்னையின் சந்துகளில் நம்மை பயணிக்க வைக்கிறது. இதில் வசிப்பவர்கள் சென்னையின் வளர்ச்சியின் வளர்ச்சிக்கு தங்கள் வாழ்க்கையை விலையாகக் கொடுத்திருக்கிறார்கள். குற்றங்களும், உதிரித் தொழில்களும் மட்டுமல்ல, அவர்கள் வாழ்க்கை. அவர்களுக்கும் முன்னேற வேண்டும் என்னும் ஆசை உண்டு. கடவுளர்கள் உண்டு. உறவுகளும், லட்சியங்களும் உண்டு என்பதை பொன்னகரத்தின் தரிசனத்தை தனது எழுதித்தின் மூலம் படம் பிடித்து காட்டுகிறார் நாவலாசிரியர் அரவிந்தன்.
நன்றி: தினத்தந்தி, 27/4/2016.