இஸ்லாம் போற்றும் தாய்மை
இஸ்லாம் போற்றும் தாய்மை, என். முகம்மது மீரான், கமருன் பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ.
இன்றைய நாகரிக உலகில் தாய்மார்களை உதாசீனம் நிலை செய்யும் நிலை நிலவுகிறது. ‘தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது’ என்று தாய்மைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேன்மை அளித்தார்கள்.
தாய், தந்தையரை எப்படி நடத்த வேண்டும் என்பதை இறைவனும் திருக்குர்ஆனில் பல இடங்களில் தெளிவுபடுத்துகின்றான். அதன் அடிப்படையில் தாய்மை, தாய்ப்பால், குழந்தை வளர்ப்பு, தாயின் துஆ போன்ற தலைப்புகளில் என். முகம்மது மீரான் தாய்மை குறித்து தெளிவுபட விளக்கியுள்ளார்.
குர்ஆன் மொழியிலும், நபி வழியிலும் கூறப்பட்ட இந்தக் கருத்துகள் இன்றைய இளைய தலைமுறையினரை நிச்சயம் கவரும் என்பது உறுதி.
நன்றி: தினத்தந்தி, 27/4/2016.