இஸ்லாம் போற்றும் தாய்மை

இஸ்லாம் போற்றும் தாய்மை, என். முகம்மது மீரான், கமருன் பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ. இன்றைய நாகரிக உலகில் தாய்மார்களை உதாசீனம் நிலை செய்யும் நிலை நிலவுகிறது. ‘தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது’ என்று தாய்மைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேன்மை அளித்தார்கள். தாய், தந்தையரை எப்படி நடத்த வேண்டும் என்பதை இறைவனும் திருக்குர்ஆனில் பல இடங்களில் தெளிவுபடுத்துகின்றான். அதன் அடிப்படையில் தாய்மை, தாய்ப்பால், குழந்தை வளர்ப்பு, தாயின் துஆ போன்ற தலைப்புகளில் என். முகம்மது மீரான் தாய்மை குறித்து தெளிவுபட விளக்கியுள்ளார். குர்ஆன் […]

Read more

மாணவர்கள் மதிப்பும் மதிப்பெண்களும் உயர்ந்திட

மாணவர்கள் மதிப்பும் மதிப்பெண்களும் உயர்ந்திட, யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 64, விலை 70ரூ. மாணவர்கள் அதிக மதிப்பும் மதிப்பெண்ணும் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் குமுதம் பக்தி ஸ்பெஷலில், ஷெல்வீ எழுதிய பலன்களும் பரிகாரங்களும் தொகுத்து, இப்போது குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, நூலாக கொண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களின் முன்னேற்றத்தில் எல்லா பெற்றோருக்கும் கண்டிப்பாக அக்கறை இருக்கும். மாணவர்களின் ஒவ்வொரு ராசியையும் கூறி, […]

Read more