மாணவர்கள் மதிப்பும் மதிப்பெண்களும் உயர்ந்திட

மாணவர்கள் மதிப்பும் மதிப்பெண்களும் உயர்ந்திட, யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 64, விலை 70ரூ.

மாணவர்கள் அதிக மதிப்பும் மதிப்பெண்ணும் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் குமுதம் பக்தி ஸ்பெஷலில், ஷெல்வீ எழுதிய பலன்களும் பரிகாரங்களும் தொகுத்து, இப்போது குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, நூலாக கொண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களின் முன்னேற்றத்தில் எல்லா பெற்றோருக்கும் கண்டிப்பாக அக்கறை இருக்கும். மாணவர்களின் ஒவ்வொரு ராசியையும் கூறி, அவர்களின் குண இயல்பைக் கூறி, இவர்கள் இப்படி நடந்துகொண்டால், தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதை ஒரு ஆசானாக நின்று பேசுகிறார். காலையில் கண் விழித்தது முதல் இரவு தூங்கும் வரை என்னென்ன துதி சொன்னால் அறிவைத் தெளிவாக்கும், எளிமையான துதிகள் மூலம் பரிகாரங்களை நிவர்த்தி, செய்யும் தன்மை என்று பெற்றோருக்கு உரிய அக்கறையுடன் ஷெல்வீ எழுதியிருக்கிறார். இதைப் படிக்கும் பெற்றோரும், மாணவர்களும் மதிப்புமிக்கவர்களாக அதிக மதிப்பெண் பெறுபவர்களாக திகழ்வது உறுதி. நன்றி: குமுதம்,  13/3/2015.  

—-

இந்திய நாட்டின் இஸ்லாமியர்களின் தேசப்பற்று, கமருன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 90ரூ.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு பற்றியும், இந்திய நாட்டின் மீது அவர்கள் கொண்டுள்ள தேசப்பற்று குறித்தும் என். முகம்மது மீரான் எழுதிய நூல். ஜாலியன் வாலாபாக்கில் உயிர் இழந்த முஸ்லிம்கள், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய முஸ்லிம்கள் மற்றும் தமிழக முஸ்லிம்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார். இன்றைய இளைஞர் சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டிய அரிய செய்திகள் அடங்கியுள்ளன. நன்றி: தினத்தந்தி, 18/3/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *