தம்பலா
தம்பலா, பாரதிவசந்தன், மேன்மை வெளியீடு, விலை 150ரூ.
புதுவை எழுத்தாளர் பாரதிவசந்தன் எழுதிய “தம்பலா” சிறுகதைக்கு, ஒரு தனிச்சிறப்பு உண்டு. இக்கதை தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மூன்று மொழிகளில் ஒரே புத்தகமாக வெளிவந்துள்ளது. எனவே ‘மூன்று மொழிகளில் வெளிவரும் தமிழின் முதல் சிறுகதை’ என்ற சிறப்பை ‘தம்பலா’ பெற்றுள்ளது. தீண்டாமைக்கும், சாதி வெறிக்கும் எதிராக இக்கதையை எழுதியிருக்கிறார், பாரதி வசந்தன். வேகமான நடை, அருமையான வர்ணனைகள். தற்கால தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சிறந்த கதை இது.
நன்றி:தினத்தந்தி, 20/4/2016.
—-
தெருவோரங்கள், பூங்கணியன், அமுதம் வெளியீடு, விலை 80ரூ.
சமுதயாத்தில் நடந்த 30 நிகழ்வுகளை நூலாசிரியர் தொகுத்துள்ள நூல். இவை அனைத்தும் சிந்திக்க வைக்கிறது.
நன்றி:தினத்தந்தி, 20/4/2016.