அன்பே உலகம்
அன்பே உலகம், சுப்ரபாரதிமணியன், நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை, பக். 48, விலை 50ரூ.
சிறுவர்களின் வாழ்க்கை நெறியை கற்றுத்தருவதோடு, சிறுவர்களின் பேச்சு வழக்கிற்கேற்ப இக்கதைகள் படைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
-இரா. மணிகண்டன்.
நன்றி: குமுதம், 11/5/2016.
—-
தொல்காப்பிய கலைச்சொல் விளக்கம், முதுமுனைவர் இரா. இளங்குமரனார், தமிழ்ப்பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், பக். 383, விலை 200ரூ.
தொல்காப்பியத்தில் இடம்பெறும் கலைச்சொற்களைத் தொகுத்து அகரநிரல் அமைத்து, எவரும் தாமே கற்கும்படியான வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கும் நூல் இது. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்து தமிழ்மக்களிடையே இருந்த மொழியை பிரதிபலிக்கும் தொல்காப்பிய கலைச்சொற்களுக்கு விளக்கம் அளிப்பது சிறந்த தமிழ்ப்பணியாகும்.
-இரா. மணிகண்டன்.
நன்றி: குமுதம், 11/5/2016.