திருக்குறள் பரிமேலழகர் உரை
திருக்குறள், பரிமேலழகர் உரை, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், உலகின் தலைசிறந்த நீதி நூலாகப் போற்றப்படுகிறது. அதற்கு உரை எழுதிய அறிஞர்கள் பலர். பழங்காலத்தில் எழுதப்பட்ட உரைகளில், பரிமேலழகர் உரையே சிறந்தது என்பது தமிழறிஞர்களின் கருத்து. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பரிமேலழகர் உரை சிறந்த முறையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கு உரிய பணி.
நன்றி: தினத்தந்தி, 11/5/2016.
—-
வாரியார் சுவாமிகள் ரசித்து தொகுத்த பழமொழிகள், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 23ரூ.
பொதுவாக பழமொழிகள் என்றாலே பொருள் பொதிந்ததாக இருக்கும். திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் ரசித்து தொகுத்த பழமொழிகள் என்றால் அதன் சிறப்பு பற்றி சொல்லவும் வேண்டுமா? 140 பழமொழிகள், வாரியாரின் விளக்கவுரையுடன் இடம் பெற்றுள்ளன.
நன்றி: தினத்தந்தி, 11/5/2016.