காளவாய்

காளவாய், கு.வெ. பாலசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 190, விலை 145ரூ.

காலம் காலமாக அச்சத்தின் வழிநடக்கும் அடிமை மனநிலையில் அமைந்த பெண்கள் மற்றும் சமூகத்தின் மவுனத்தை, உறுதியான எதிர்ப்பு மனநிலையோடு, ஆவேசத்தோடு மாற்றம் கொள்ளும் சாத்தியங்களை உருவாக்கி காட்டுகிறது இந்த நாவல்.

சமூக அநீதிகளுக்கு எதிரான பலதரப்பட்ட கதாபாத்திரங்களின் ஒருங்கிணைந்த குரலாக ஓங்கி ஒலிக்கிறது நாவல். நீதியையும், நேர்மையையும் அறவழியில் நிலைநாட்டும் முயற்சியில் ஒவ்வொரு கதாபாத்திரமும் போராடுவதும், இறுதியாக உண்மையும் தர்மமும் நிலைநாட்டப்படுவதும் சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்தவே செய்கின்றன.

ஆங்காங்கே பளிச் மின்னல்களாய் தோன்றும் வசனங்களும் ஈர்க்கின்றன. ‘சேற்றில் முளைத்த தாமரை, சேற்றின் குணங்களைக் கொள்வதில்லை, தண்ணீரில் வளர்ந்து சூரியனைப் பார்க்கும் தாமரை துாய்மைக்கு அடையாளமாகத் துலங்குகிறது. பொறிகளை இயக்குகிற மனம் துாய்மையாகவும் வலிமை உடையதாகவும் இருக்கும் போது குணங்கள் நல்லவையாகவே அமையும்…’’ (பக். 172) படிக்க சுவாரசியமான, கவனத்தை ஈர்க்கும் நாவல்.

-ஸ்ரீநிவாஸ் பிரபு

நன்றி: தினமலர், 26/6/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *