நாகூர் இ.எம்.ஹனீபா

நாகூர் இ.எம்.ஹனீபா, செ. திவான், சுஹைனா பதிப்பகம், விலை 350ரூ.

செ. திவான் பாளையங்கோட்டைவாசி. படிப்பு, எழுத்து, மறுமலர்ச்சி எனத் தம் வாழ்நாளைக் கழித்துக் கெண்டிருப்பவர், அடுத்த தனது 100வது நூலை மலபார் மாப்பிள்ளை புரட்சி – 1921 என்ற பெயரில் அதுவும் 1000 பக்கங்களில் வெளியிட இருக்கிறார்.

சுஹைனா பதிப்பகம் இவரது சொந்தப் பதிப்பகம் திவானுக்கு ‘தி’வானே எல்லை. ஹனீபா இசை முரசு அல்ஹாஜ். இரவது பாடல்கள் ‘ஹனி’போல் மென்மையன்று, முரசுபோல் ஆரவாரமுடையது. திராவிடமும் தெய்வீகமும்(தீன்) இவரது இரண்டு கண்கள்.

பொருந்தவில்லையே என்று பொருமவேண்டாம். பொருந்தாமைதான் திராவிடமோ! இசை, முரசு, இஸ்லாமும் இன்னிசையும், திராவிட இயக்கங்களில், தீன் முழக்கங்களில் திரை இசையில், தீந்தமிழ் புலவர் நாவில், தித்திக்கும் நினைவுகளில் – ஹனிபா என்று விரிவாக விதந்து எழுதியுள்ளார்.

நிறைவாக “ஓங்கி ஒலித்த முரசு தனது நாதத்தை நிறுத்திக்கொண்டது. திராவிட இயக்கத்திற்குப் பேரிழப்பு. தமிழர்களுக்குப் பெரும் இழப்பு. இஸ்லாமியச் சமுதாயத்திற்கு இணையில்லாத இழப்பு” கூறவது முற்றிலும் உண்மைதான்.

நன்றி: காவ்யா, 2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *