எளிய தமிழில் ஆங்கில இலக்கணம்
எளிய தமிழில் ஆங்கில இலக்கணம், பி.சி. கணேசன், நர்மதா பதிப்பகம், விலை 120ரூ.
உலக மொழியான ஆங்கிலத்தை பிழையின்றி கற்பது அவசியம் என்ற நோக்கத்தில் படைக்கப்பட்டது இந்நூல். தமிழ் இலக்கணத்திற்கும், ஆங்கில இலக்கணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆகவே ஆங்கில இலக்கணத்தின் அமைப்பு முறைகளை தமிழில் விளக்கிச் சொல்லி எளிதில் புரிய வைக்கிறார் நூலாசிரியர் பி.சி. கணேசன், ஆங்கிலத்தை பயில விரும்பும் அனைவரும் இந்த நூலை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நன்றி: தினத்தந்தி, 9/11/2016.
—-
நவீன விருட்சம், அழகிய சிங்கர்,விலை 100ரூ.
1988ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘நவீன விருட்சம்’ காலாண்டு இதழின் 100வது இதழ், சிறப்பு மலராக வெளிவந்துள்ளது. புதிய கோணத்தில் எழுதப்பட்ட கதை, கட்டுரை, கவிதைகள் நிறைந்துள்ளன. வழக்கமாக தனி இதழ் விலை 15ரூ. இந்த 100-வது சிறப்பு மலர் 100ரூ.
நன்றி: தினத்தந்தி, 9/11/2016.