கல்விச்செல்வம் தந்த காமராசர்

கல்விச்செல்வம் தந்த காமராசர், ஈசாந்திமங்கலம் முருகேசன், மீனாட்சி பதிப்பகம், விலை 160ரூ.

தமிழ்நாடு கல்வியில் முன்னேற அரும்பாடுபட்டு, அதில் வெற்றியும் கண்டவர் பெருந்தலைவர் காமராஜர். தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக ஏறத்தாழ 10 ஆண்டுகள் பதவி வகித்தார். அது ஒரு பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது.

இலவச கல்வி, இலவச மதிய உணவு திட்டம் ஆகியவற்றுக்கு முன்னோடி. அரசியல் வாழ்க்கையில் தூய்மையை கடைப்பிடித்தவர். “கிங்மேக்கர்” (அதாவது பல பிரதமர்களை உருவாக்கியவர்) என்று புகழ் பெற்றவர்.

அவருடைய வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார், ஈசாந்திமங்கலம் முருகேசன். படிக்க வேண்டிய புத்தகம். சில படங்களைச் சேர்த்திருந்தால், மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

நன்றி: தினத்தந்தி, 26/4/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *