திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும்
திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும், முனைவர் ப. கமலக்கண்ணன், காவ்யா, விலை 150ரூ.
திராவிட இயக்கம் சமூக நீதி, இட ஒதுக்கீடு, தமிழ்மொழி ஆகியவற்றின் மேம்பாட்டுக்காகப் பல்வேறு களப் போராட்டங்களை முன்னின்று நடத்தியது. திராவிட மொழியியலின் தந்தை என அழைக்கப்படும் கால்டுவெல் ‘தமிழ் மொழி தனித்து இயங்கும் வல்லமைமிக்கது’ என்று முதன் முதலாகக் கூறினார்.
தமிழில் பிற மொழிக் கலப்புக்கு எதிராக மறைமலையடிகள், திரு.வி.க. தேவநேயப் பாவாணர் போன்ற மூத்த தமிழறிஞர்கள் தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுத்தனர். திராவிட இயக்கம் மற்றும் தனித்தமிழ் இயக்க வரலாற்றை 9 தலைப்புகளின் கீழ் அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.
நன்றி: தி இந்து, 12/8/2017.