உலகப் பெருமக்கள்
உலகப் பெருமக்கள், தொகுப்பும் பதிப்பும் பேரா. சு. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 300ரூ.
“காசு பிள்ளை” என்று அழைக்கப்படும் கா.சுப்பிரமணியபிள்ளை, “கல்விக்கடல்” என்று திரு.வி. கல்யாணசுந்தரனாரால் பாராட்டப்பட்ட தமிழறிஞர். அவர் எழுதிய புகழ்பெற்ற நூல்களில், “உலகப்பெருமக்கள்” என்ற இந்த நூலும் ஒன்று.
இதில் மகாத்மா காந்தி, ஸ்டாலின், ரூஸ்வெல்ட், ஜார்ஜ் பெர்னாட்ஷா, செகப்பிரியர்(ஷேக்ஸ்பியர்) உள்பட 15 உலகத் தலைவர்களின் வரலாறுகள் அடங்கியுள்ளன. தூய தமிழ் நடையில் காசு பிள்ளை இந்த நூலை எழுதியுள்ளார்.
ஆண்டுகள் பல சென்று விட்டபோதிலும், இளமையோடு விளங்குவது இந்த நூலின் சிறப்பு. நவீன வடிவமைப்புடன் இந்த நூலைத் தொகுத்து பதிப்பித்துள்ள பேராசிரியர் சு. சண்முகசுந்தரம் பாராட்டுக்குரியவர்.
நன்றி: தினத்தந்தி, 15/11/2017