இரவு
இரவு, கலைச்செல்வி, என்சிபிஎச், விலை 140 ரூ.
பிடித்த கதைகளில் சில ரகசியங்கள் கட்டவிழ்க்கப்பட்ட மேலும் மேலும் மர்மப் புன்னகையுடன் அவை நழுவிக் கொண்டு தான் இருக்கின்றன. அகமும் புறமுமான தேடல்களை கதைகள் ஆகி இருக்கிறேன் என்று சொல்லும் நூலாசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.
இந்தக் கிளி கூண்டில் தொடங்கி அம்மாவும் தனமும் உள்ளிட்ட 15 கதைகள் அடங்கியுள்ளன. சராசரியான வாழ்க்கைச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் மனித மன ஓட்டங்களை வெகு யதார்த்தமாக பதிவு செய்துள்ள கதைகளாகவே அனைத்துக் கதைகளும் உள்ளன.
எளிமையான மொழிநடையில் செறிவான கதைகள். கதையை வாசித்து முடிக்கையில் நமக்குள்ளும் ஒரு சிறு பொறியை பற்ற வைத்து விடுகின்றன. கதை யுத்தி நூலாசிரியருக்கு லாவகமாக வரப்பெற்றுள்ளது.
கதையில் வரும் இளமதியும் அடைக்கும் தாள் கதையில் வரும் கீதாவும் ராகவியும் வேறு யாரோ அல்ல நம்மோடு பயணிக்கிற சக தோழிகள் இருக்கிறார்கள். பிரசவ வலி இரண்டும் குறிப்பிடத்தக்க கதைகளாக உள்ளன.
நன்றி: தி இந்து, 26/5/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026752.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818