என் பெயர் கதை சொல்லி 1
என் பெயர் கதை சொல்லி 1, ரா.அருள் வளன் அரசு, வசந்தா பதிப்பகம், விலை 120ரூ.
உரையாடல் தொகுப்பு
காவேரி தொலைக்காட்சியில் ஊடகவியலாளர் ரா.அருள் வளன் அரசு நிகழ்த்திய பதினைந்து ஆளுமைகளுடனான சந்திப்பின் எழுத்து வடிவ தொகுப்பு நூல் இது.
கவிஞர் மனுஷ்யபுத்திரன், சல்மா, மனுஷி, நெல்லை ஜெயந்தா, பத்திரிகையாளர் ரவி பிரகாஷ், எழுத்தாளர்கள், ஜோ.டி.குரூஸ், பாஸ்கர் சக்தி, ரமேஷ் வைத்தியா, நா.முத்துக்குமார், பேச்சாளர் சுந்தரவல்லி எனப் பல்வேறுபட்ட ஆளுமைகளின் உரையாடல்கள் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.
கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் நேர்காணலில் கலைஞர் கருணாநிதியுடன் நிகழ்ந்த சந்திப்பு நெகிழ்ச்சியாக நினைவு கூறப்பட்டுள்ளது.
தமிழருவி மணியனின் நேர்காணலில் பெருந்தலைவர் காமராஜர் உடனான உறவு, வாசிப்பு பற்றிய அவர் முன்வைக்கும் கருத்துகள், ரஜினிகாந்துக்கு காந்தியைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகத்தை பரிசளித்தது ஆகியவை செறிவாகப் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு நேர்காணலிலும் ஒரு புதிய விஷயம் இருக்கிறது.
நன்றி: அந்திழை, ஜுலை 2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818