மதுரையின் மாண்புகள்
மதுரையின் மாண்புகள், முனைவர் சி.வடிவேலன், அய்யா நிலையம், விலை 125ரூ.
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையை பாடாத புலவர்கள் இருப்பார்களா? அதுபோல் மதுரையின் பெருமையை பறைசாற்றும் பாடல்களை கண்டுபிடித்து எளிய விளக்கங்களுடன் தொகுத்து வழங்கியுள்ளார் நூல் ஆசிரியர்.
சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப்படை, புறநானூறு, பெருங்குன்றூர் பெருங்கவுசிகனார் போன்ற பல பாடல்களை விளக்கி இருக்கிறார். விண்ணைத் தொடுமளவிற்கு வீடுகள், தென்றல் காற்று புகுவதற்கு சாளரங்கள், பல மொழிகளை பேசும் வணிகர்கள், பலவகை வாத்தியங்களின் ஒலி போன்று அவர் வர்ணிப்பது சங்ககாலத்தில் மதுரை நகரம் எப்படி இருந்திருக்கும் என்பதை படிப்பவர்கள் கண்முன் நிழலாடும்.
நன்றி: தினத்தந்தி, 25/7/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027099.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818