கம்பனிலிருந்து பாரதிதாசன் வரை சில பதிவுகள்
கம்பனிலிருந்து பாரதிதாசன் வரை சில பதிவுகள், ம.பெ.சீனிவாசன், மீனாட்சி புத்தகநிலையம், பக்.200, விலை ரூ.180;
கம்பராமாயணம் தொடர்பான ஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஏழாவது கட்டுரையான கம்பனும் பாரதிதாசனும் கட்டுரை, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை பழமைச் சிமிழுக்குள் அடைக்கும் முயற்சி என்று ஐயப்படுகிறவர்களுக்கு விளக்கம் அளிக்கும் முயற்சியான பின்னுரை, எட்டாவது கட்டுரையாகத் தோன்றிவிட்டது.
கம்பராமாயணம் இன்று வரை போற்றப்படுவதற்குக் காரணம் அதன் உலகியல் அடித்தளமே என்பதை விளக்கும் கம்பனில் உலகியல் கட்டுரை, கம்பராமாயணத்தில் கம்பர் குறிப்பிடுகிற சில பொருள்களை வைத்து, அவர் குறிப்பிடுவது திருமாலிருஞ்சோலை, திருவேங்கடம் ஆகியவற்றைத்தான் என்பதைக் கூறும் கம்பன் பாடும் திவ்ய தேசங்கள் கட்டுரை, செவி வழியாகக் கேட்டு, வாய்வழியாகப் பாடப்பட்டு காலங்காலமாக நிலைபெற்ற பல இலக்கியங்களுக்கு ஓலைச்சுவடி வடிவம் கொடுக்க அக்காலத்தில் ஏடு எழுதுவதையே தொழிலாகக் கொண்ட பலர் இருந்தனர்;
அப்படி ஏடு எழுதியவர்களால்தான் கம்பராமாயண ஓலைச்சுவடி நமக்குக் கிடைத்திருக்கிறது என்பதைக் கூறும் கம்பனும் ஏடெழுதுவோரும் கட்டுரை, கம்பராமாயணம் தோன்றிய பிறகு அதன் அடியொற்றி தோன்றிய தக்கை ராமாயணம் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் கம்பனும் தக்கை ராமாயணமும் கட்டுரை மற்றும் கம்பனும் சொ.முருகப்பாவும் கட்டுரை, சீதை சிறையெடுப்பு குறித்த கட்டுரை என கம்பராமாயணத்தை மைய அச்சாகக் கொண்டு இந்நூல் சுழன்று வாசகர்களின் பார்வையை விரிவுபடுத்துகிறது.
நன்றி: தினமணி, 11/2/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818